abi

Thursday, 11 April 2013

சோதனைக் குழாய் குழந்தை முறையை கண்டுபிடித்த விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸ் காலமானார்

       உலகில் அறிவியல் வளர்ச்சியின் முக்கியச் சாதனையாக கருதப்படும் சோதனைக் குழாய் குழந்தை முறையை கண்டுபிடித்த விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸ் (Robert Edwards) காலமானார்.
87 வயதான அவர் நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. அவரது அறிவியல் கண்டுபிடிப்பால் செயற்கை கருவூட்டல் முறையில், 1978-ம் ஆண்டு உலகின் முதல் சோதனை குழாய் குழந்தை பிறந்தது. தற்போது 35 வயதாகும் லூயிஸ் ப்ரௌன் (Louise Brown) என்னும் அந்த பெண் ராபர்ட் எட்வர்ட்ஸ் (Robert Edwards) காலமானதற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு மகிழ்ச்சியை உருவாக்கியவர் என்றும், அவரது மறைவு ஈடு செய்ய முடியாதது என்றும் லூயிஸ் ப்ரௌன் (Louise Brown) தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். சோதனைக் குழாய் குழந்தை முறையை கண்டுபிடித்ததற்காக, 2010-ல் ராபர்ட் எட்வர்ட்ஸ் (Robert Edwards)-க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
உலகில் அறிவியல் வளர்ச்சியின் முக்கியச் சாதனையாக கருதப்படும் சோதனைக் குழாய் குழந்தை முறையை கண்டுபிடித்த விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸ் (Robert Edwards) காலமானார்.

No comments:

Post a Comment