செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கூறியுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டுள்ள ரோவர் விண்கலமானது அங்கிருந்து பாறைகளின் மாதிரிகளை சேகரித்து கடந்த மாதம் பூமிக்கு அனுப்பியது.
பாறைகளின் மாதிரிகளை ஆராய்ச்சி செய்ததில் உயிர் வாழ்வதற்கு அடிப்படை வேதிப் பொருட்களான சல்ஃபர், நைட்ரஜன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் உள்ளிட்டவைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் பாறைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட இடத்தில் முன்னதாக நதியோ அல்லது ஏரியோ இருந்ததும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் முன்னொரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment